கடந்த 2011ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் நடிகர் நடித்த சிறுத்தை படம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் சிவா, சூர்யாவை இயக்குகிறார் என்று அப்போது பேசிக்கொள்ளப்பட்டது.
ஆனால், இயக்குனர் சிவா அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று வரிசையாக நான்கு படங்களை இயக்கினார். இதில் விஸ்வாசம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அஜித்துடனேயே சிவா இணைவார் என்று பேச்சு வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் சிவா சூர்யாவை வைத்து இயக்குகிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கான ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.