singam puli fake account hospital issue

தமிழில் தற்போது காமெடி நடிகராக வலம் வருபவர் சிங்கம் புலி. இதற்கு முன்பாக உதவி இயக்குநராகவும், வசனகர்தாவாகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் அஜித்தின் ரெட், சூர்யாவின் மாயாவி என இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் சிங்கம் புலி உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்துவருவதாகவும், எனவே அவருக்கு பணம் கொடுத்துஉதவ வேண்டும் என ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இது கோலிவுட்டில் சற்று பரபரப்பைகிளப்ப தற்போது சிங்கம் புலி இது குறித்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், “கடந்த ரெண்டு நாளாகஒரு போலியான ஃபேஸ்புக் அக்கவுண்ட்லயிருந்து, என் பெயரை பயன்படுத்தி சிலர் ஏமாற்றி பணம் வசூலிக்கின்றனர். அந்த விளம்பரத்தை யாரும் நம்ப வேண்டாம். எனக்கு சிங்கம் புலி ஆக்டர் என்ற ஒரே அக்கவுண்ட் தான் இருக்கு. நான் யார்கிட்டையும் பணம் கேட்கவில்லை. கேட்கக்கூடிய நிலையிலும் இல்லை. என்னைப் பற்றி எந்தப் பிரச்சணையாக இருந்தாலும் சரி, என்னுடைய நம்பருக்கு ஃபோன் பண்ணி முழு விவரங்களையும் கேட்டுவிட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுங்க” என்றார்.