/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1649.jpg)
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் யானை. இதனைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான படம் 'சினம்'. போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் இரண்டாண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தது. கரோனா பரவலால் இப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிப்போனது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சினம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சினம் படம் செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் சினம் வெளியாகும் முந்தைய நாள் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)