Skip to main content

ராஜுவுடன் காதல், கமலுடன் கிசுகிசு... - லைம்லைட்டிலேயே இருந்த சிம்ரன்! சினிமா மெமரீஸ் #1

Published on 13/06/2018 | Edited on 14/06/2018

 

1997ல் இருந்து அடுத்த ஆறேழு வருடங்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதைக் களவாடிய ட்ரீம் கேர்ள் சிம்ரன். அவர் நடனத்தின் போது கையை தூக்கி, இடுப்பை அசைப்பது இன்றும் 90ஸ் கிட்ஸின் கனவுகளில் வந்துகொண்டுதான் இருக்கிறது. அப்போதிருந்த முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் ஜோடியாக நடித்தவர். ஆனால், சூப்பர் ஸ்டாருடன் மட்டும் நடிக்காமல் இருந்தார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.    

 

simran


மும்பை தொலைக்காட்சியில் "சூப்பர் ஹிட் முக்காபுலா' நிகழ்ச்சியின் தொகுப்பாளியாக இருந்தபோது சீனியர் நடிகையான ஜெயாபச்சன், ரிஷிபாலா என்ற பெயரை சிம்ரன் என்று மாற்றினார். சிம்ரன் என்றால் தியானம் என்று அர்த்தம்.

சினிமா உலகில் காதல் தோல்வி, கிசுகிசுக்கள் எல்லாம் சகஜமான ஒன்றாகவே இருக்கிறது. சிம்ரனின் சினிமா வாழ்க்கையிலும்

அப்பாஸ்- சிம்ரன் காதல்
ராஜூசுந்தரம்- சிம்ரன் காதல்
கமலஹாசன்- சிம்ரன் ரகசிய கல்யாணம் என்று தனக்கு நடந்த தோல்வியை பற்றியும் கிசுகிசுக்கள் பற்றியும் தெரிவித்தது....   

 

simran raju sundaram


"இதில் அப்பாஸ் எனது நல்ல நண்பர். இருவரும் பெங்களூரில் மாடலிங் செய்தோம். ராஜூவுடன் காதல் ஏற்பட்டதும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நண்பர்களால் பிரிந்துவிட்டோம். கமல்சார் என் மரியாதைக்குரியவர். அவருடன் நான் நடித்துக்கொண்டிருக்கும் போது அவரது குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம். அதனால் என்னையும் அவரையும் இணைத்து பேசியிருக்கலாம்.

 

 


என் காதலெல்லாம் நிஜமானது, தீபக்குடன்தான். தீபக் எனது சிறுவயது தோழன், அவன் என்னை ரிஷி என்றுதான் அழைப்பான். அவனுடன் காதலானதும் ஒரு விபத்து மாதிரிதான். நான் தீபக்கை கல்யாணம் செய்துகொள்வேன் என்று நினைத்துப் பார்த்ததுகூட கிடையாது. பெரியவர்கள் சொல்வது போல இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட பந்தம்.

அப்போது எனது சினிமா வாழ்வில் சில கசப்பான நிகழ்ச்சிகள் நடந்தன. நான் நினைத்துக்கொண்டிருந்தது ஒரு வாழ்க்கை, ஆனால் அமைந்தது வேறு வாழ்க்கை, எதுமே நம்ம கையில் இல்லை, எல்லாம் அவன் செயல் என்பது நிஜம்தான்.

நமக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுதான் நடக்கும். இன்னார் உன் வாழ்க்கைத்துணைவர் என்று விதி உண்டோ அது நடந்தே தீரும். என்று அம்மா சொன்னார். அவர் சொன்னது போல் நான் நடிகையானதும் ஒரு விதிதான்.' மக்கள் மனதில் குடியேறியதும் விதிபோலதான். நாங்கள் பஞ்சாப் சண்டிகரை சேர்ந்தவர்கள், தீபக் பக்காவும் பஞ்சாபிதான், டெல்லியில் கரோல் பார்க்கில் என் சித்தி வீடு இருந்தது. சித்தியின் வீட்டிற்கு எதிர்வீடுதான் தீபக் வீடு.

 

 

simran


குடும்பத்துடன் மும்பையில் வசித்தாலும் ஒவ்வொரு விடுமுறைக்கும் டெல்லியில் சித்தியின் வீட்டிற்குப் போவது வழக்கம். நாங்கள் விளையாடும்போது எதிர்வீட்டுப் பையன் தீபக்கையும் எங்களுடன் சேர்த்துக்கொள்வோம். டெல்லியில் பஞ்சாபி அஸோசியேஷன் சார்பில் நடக்கும் விழாக்களுக்குத் தீபக்கும் அவன் அப்பாவும் வருவார்கள். போட்டிகளிலும் கலந்துகொள்வார்கள். இப்படி குடும்பத்துடன் நட்பு ஏற்பட்டது. பிறகு எங்களது நல்லது- கெட்டது எல்லாவற்றிலும் இருவீட்டாரும் கலந்துகொள்வோம்.

நான் சிம்ரன் என்ற பெயரிலே நடிகையானதும் சிம்ரன் நல்ல அழகான பெயர்தான் என்றான். நான் முதல் படம் பண்ணும் போதே நீ நல்லாவரணும் ரிஷி என்று டெல்லியிலிருந்து போனில் வாழ்த்தினான்.

 

 


சின்ன வயதில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ரொம்ப பிடிக்கும் அவரை சந்தித்து ஆட்டோகிராப் கூட வாங்கியிருக்கோம். தமிழில் நான் பிஸியானதும் தீபக்கை அதிகம் சந்திக்க முடியாமல் போனது. ஆனாலும் தன்னுடன் விளையாடிய ஒரு ஃப்ரண்ட் பிரபலமான நடிகையாக ஆயிருக்காளே என்று சந்தோஷப்பட்டான் தீபக்.

எனக்கும் டான்ஸ்மாஸ்டர் ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் விஷயங்களை அவன் கேள்விப்பட்டு ஒரு நாள் என்னிடமே நேரில் கேட்டான், "நீ தமிழ் நாட்டு மருமகள் ஆகப்போகிறாயாமே' என்றான். நான் ஆமாம் என்றேன். காரணம் அப்போதெல்லாம் தீபக் என்னோட விளையாட்டுதோழன். நல்ல நண்பன் என்ற உணர்வு மட்டும்தான் இருந்தது. அவனுக்கும்தான்.


 

 

simran


வாழ்க்கை ஒரு சைக்கிள்தானே உலகத்தில் எது நிரந்தரம்? மாற்றம் ஒன்று தானே மாற்ற முடியாதது, என் வாழ்விலும் ஏற்றங்களும், ஏமாற்றங்களுமாய் வந்தது, சிரித்துக்கொண்டே அழுதேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வியும் தங்கை மோனலின் மரணமும் என்னை ரொம்பவே பாதித்தது. இன்னும் சொல்ல முடியாத பல விஷயங்கள் பாதித்தன. மேலும் இதே சூழ்நிலையில் சென்னையில் தொடர்ந்து இருக்கப்பிடிக்கவில்லை, மனதளவில் காயம் பட்ட பிறகு அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதை விட்டு சற்று ஒதுங்கி இருப்பதுதானே நல்லது.

நடித்தது போதும் என்ற முடிவுக்கு வந்தேன். இதை அம்மா அப்பாவிடம் சொன்னதும் அவர்களும் அந்த முடிவை ஆதரித்தார்கள், ""போதும் டீ. ராஜாத்தி இதுவரை சினிமாவில் நடித்து பணம், புகழ் எல்லாம் சம்பாதித்தாகிவிட்டது. இனி உனக்கென்று ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு நிம்மதியாய் இரு'' என்றார்கள். அவர்களின் வார்த்தைகளில் அன்பும், தடவிக்கொடுத்த சிநேகமும் என்னை புத்துணர்ச்சி கொள்ள வைத்தது.

 

 


அப்போதுதான் என் அப்பா தீபக்கை பற்றி கேட்டார். என் வாழ்க்கையில் நல்லது நடந்தபோதெல்லாம் ஓடி வந்து வாழ்த்தி மகிழ்ந்தவன் தீபக்தான் என்று மனதில் உள்ளதைச் சொன்னேன். கணவர் நண்பராகவும், இருந்தால் ஒரு பெரிய பிளஸ், நம்மை முழுமையாக புரிந்து கொள்வார். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான்.''   




 

 

சார்ந்த செய்திகள்