simran tweet about madhavan

Advertisment

இஸ்ரோவில்பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி- நம்பி விளைவு' என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்லவரவேற்பைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் மாதவனின்மனைவியாக நடித்துள்ள சிம்ரன் மாதவன்குறித்துதனது சமூகவலைதளப்பக்கத்தில்பகிர்ந்துள்ளார். அதில்,“பார்த்தாலே பரவசம்’ படத்தின் சிமிகேரக்டர், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ இந்திராகேரக்டரைஅடுத்து ’ராக்கெட்ரி’ படத்தின்மிஸஸ்நம்பி நாராயணன்கேரக்டரில்நடித்ததுவரை உங்களிடம் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. 20 வருடங்களுக்குப் பிறகு நீங்கள் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் உங்களுடன் நடித்தது அருமையாக இருந்தது. நீங்கள் சிறந்தவர்மேடி” என்று குறிப்பிட்டுள்ளார்.