Advertisment

"ரூம் போட்டு யோசிப்பாங்களோ?" - சிம்ரன் கலகல பதிவு

simran post on instagram - post goes viral

அஜித், சிம்ரன் நடிப்பில் 1999-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'வாலி'. எஸ்.ஜே சூர்யா இயக்குநராக அறிமுகமான இப்படத்தை எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்திருந்தார். தேவா இசையமைப்பில் வெளியான இப்படத்தின் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தில் இடம்பெற்ற 'நிலவை கொண்டு வா' பாடலை காமெடியாக ரசிகர்கள் உருவாக்கிய வீடியோ சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் அனுராதா ஸ்ரீராம் ரொம்ப அர்ப்பணிப்பாக பாடுவது போலவும் உன்னிகிருஷ்ணன் காய்ச்சல் காரணமாக மெதுவாக பாடுவது போலவும் அமைந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் சிம்ரன் இந்த காமெடி வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, "ரூம் போட்டு யோசிப்பாங்களோ?" என கிண்டலாக பதிவிட்டுள்ளார். சிம்ரனின் இப்பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிம்ரன் தற்போது ஆர்யாவின் 'கேப்டன்' படத்திலும், பிரசாந்தின் 'அந்தகன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

simran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe