90களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்த சிம்ரன், பின்பு ஒரு கட்டத்திற்கு பிறகு முக்கிய மற்றும் துணை கதபாத்திரரத்தில் நடிக்கத் தொடங்கினார். பின்பு தொட்ர்ச்சியாக அப்படியே நடித்து வந்த அவர், கடைசியாக சசிகுமாருக்கு ஜோடியாக டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்திருந்தார். கடந்த மே மாதம் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அவர் நடித்த சமீபத்திய படத்தில் இப்படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. 

Advertisment

இந்த நிலையில் ரஜினியை சந்தித்துள்ளார் சிம்ரன். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, “சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை. நமது சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணத்தை பகிர்ந்தேன். கூலி மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி இந்த சந்திப்பை இன்னும் சிறப்பாக்கியது” என நெகிழ்ச்சியுடன் நடித்திருந்தார். 

கூலி படம் கடந்த 14ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ரூ.500 கோடியை நெருங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 2019ல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் ரஜினியும் சிம்ரனும் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.