''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது'' - சிம்ரன் வேதனை!

saag

கேரளா மாநிலத்திலுள்ள பாலக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்றுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டாசு வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தைக் கொடுத்துள்ளனர். இதைச் சாப்பிட்ட யானையின் வாய்ப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்ட காரணமாக அதனால் வேறு உணவை உட்கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறது. வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத யானை அருகே உள்ள ஆற்று நீரில் இறங்கி, உயிரிழந்துள்ளது. அந்த யானையை உடல் கூறாய்வு செய்த மருத்துவர்களுக்கு, யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்குப் பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து நடிகை சிம்ரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்...

''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த அப்பாவி உயிரினங்கள் மீதான வன்முறையை நிறுத்த வேண்டும். அவர்கள் இந்த உலகில் உள்ள அனைத்து அன்பிற்கும் கவனிப்பிற்கும் தகுதியானவர்கள்!'' என வேதனை தெரிவித்துள்ளார்.

simran
இதையும் படியுங்கள்
Subscribe