சுரேஷ் காமாட்சி தயாரித்து, சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று காரணாமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவால் நடிகர் நடிகைகள் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி செய்வது, சமையல் செய்வது என வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சிம்பு தற்போது வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யும் வீடியாவை நடிகர் மகத் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''சரி தோழர்களே, இதோ, ரசிகர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க வீட்டிலேயே எஸ்.டி.ஆரின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ!'' எனப் பதிவிட்டுள்ளார்.