Skip to main content

இந்தியன் 2வில் கமலுக்கு வில்லனாக சிம்பு ?

Published on 17/11/2018 | Edited on 17/11/2018
simbu

 

 

 

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கிடையே இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துல்கர் சல்மானிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தில் சிம்பு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருகிறார் என்றும் தற்போது செய்தி கசிந்துள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் தந்தை கமலுக்கு மகன் கமலே வில்லனாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காஜல் அகர்வாலுக்கு பதிலாக கமலுடன் இணையும் பிரபல நடிகை

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

indian 2 movie new update

 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துவந்தார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு போனது. இதனால் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்தனர். 

 

இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. இதனால் விரைவில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், தற்போது நடிகை காஜல் அகர்வால் படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் கிச்சலு என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால் காஜல் அகர்வால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

ad

 

இந்நிலையில், காஜல் அகர்வாலுக்கு பதிலாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன், த்ரிஷா கூட்டணியில் ‘மன்மதன் அம்பு’, ‘தூங்காவனம்’ ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைய உள்ளது. மேலும், 'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தும் மீண்டும் படமாக்கப்பட உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

‘இந்தியன் 2’ படத்திலிருந்து விலகும் காஜல் அகர்வால்?

Published on 11/11/2021 | Edited on 11/11/2021

 

kajal aggarwal leaves from indian 2

 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துவந்தார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு போனது. 

 

இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக ஷங்கர் அறிவித்தார். இதனால் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்தனர். அதன் பின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதால், விரைவில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியது. 

 

இந்நிலையில், ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை தொடங்குவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. கெளதம் கிச்சலு என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால் காஜல் அகர்வால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காஜல் அகர்வால் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் அவருக்குப் பதிலாக மற்ற நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுவருகிறார்கள். அந்த வகையில், ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நடிகை யார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தும் மீண்டும் படமாக்கப்பட உள்ளதாக  கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.