style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துல்கர் சல்மானிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நாயாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் தகவல் முன்னர் வெளியாகியிருந்தது. எது எப்படியோபடக்குழு இன்னமும் இந்த தகவல்களை உறுதிப்படுத்ததால் விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.