Advertisment

பாட்ஷா-வாக மாறிய சிம்பு ; வைரலாகும் வீடியோ

Simbu, who became Baasha; Video goes viral

மாநாடு பட வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். கடந்த ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதனிடையே கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்திலும் சிம்பு நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' படத்தில் நடிக்க உள்ளார்.

Advertisment

இந்த நிலையில் சிம்புவின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பாட்ஷா பட பாணியில் ஆட்டோ ஓட்டுநர் கெட்டப்பில் சிம்பு தோன்றுகிறார். இது ஒரு விளம்பரப் படத்திற்காக எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. இருப்பினும் சிம்புவின் ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisment

actor simbu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe