வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணமாக முதல் முறையாக சிம்பு - வெற்றிமாறன் காம்போ, வட சென்னை பட உலகில் நடக்கும் கதை உள்ளிட்ட சில அம்சங்கள் இருக்கிறது. படத்தின் அறிவிப்பு புரொமோவுடன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஷூட் கடந்த ஜூலையில் சில தினங்கள் நடந்தது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக இயக்குநர் நெல்சனும் இடம்பெற்றிருந்தார். 

Advertisment

அந்த சில தினங்கள் நடந்த அறிவிப்பு புரொமோ உடனடியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் வெற்றிமாறன் படம் என்பதால் தாமதமாகி வந்தது. ஆனால் அதற்கு முன்னதாக ஒரு சின்ன புரொமோவை கடந்த மாதம் 4ஆம் தேதி வெற்றிமாறன் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் படத் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டிருந்தார். இதில் சிம்பு முகம் இடம்பெறவில்லை. இருப்பினும் வட சென்னை படத்தில் வரும் அந்த காலத்து கெட்டப்பில் சிம்பு இருந்திருந்தார். இதனைத் தொடர்ந்து அறிவிப்பு புரொமோ நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனை சமீபத்தில் தெரிவித்த தயாரிப்பாளர் தாணு, கூடவே சிம்பு வெற்றிமாறனுடன் இருந்து கொண்டு டப்பிங் செய்யும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.   
 
இதனால் நாளைய தினத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க அவர்களுக்கு சுவாரஸ்ய தகவலாக அறிவிப்பு புரொமோ ஒரே நேரத்தில் சமூக வலைதளங்களிலும் திரையரங்கிலும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட அறிவிப்பில், “சிம்புவின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க சிம்பு மற்றும் வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும். ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது. இதுவே சிம்பு -வெற்றிமாறன் கூட்டணி மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் அன்பிற்கும் எங்களின் நன்றியை தெரிவிக்கும் சிறப்பு தருணமாகும். இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே அறிவித்த நாளைய தேதியை குறிப்பிடாமல் விரைவில் எனக் குறிப்பிட்டுள்ளதால் மீண்டும் இந்த அறிவிப்பு புரொமோ தள்ளி போவதாக தெரிகிறது. விரைவில் புதுதேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment

கடந்த ஆக்ஸ்ட் மாதம் கூலி படம் ரிலீஸ் சமயத்தில் அப்படத்துடன் தியேட்டர்களில் இப்படத்தின் அறிவிப்பு புரொமோ வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Advertisment