படப்பிடிப்பு தளத்தில் சிம்பு! வைரலாகும் புகைப்படம்!

gdhds

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்த நிலையில், தற்போது 'வெந்து தணிந்தது காடு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

hjhdhdf

இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர், சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இப்படத்தில் சிம்புவிற்கு தாயாக நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கவுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதை உறுதிப்படுத்தும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்பு ராதிகாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த முழு விவரங்களைப் படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

actor simbu Vendhu Thanindhathu Kaadu
இதையும் படியுங்கள்
Subscribe