Advertisment

விமானத்தில் பயணிக்கும் சிம்பு! வைரலாகும் ஃபோட்டோ!

gdgdsgbsd

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்த நிலையில், தற்போது 'வெந்து தணிந்தது காடு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர், சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடந்தது.

Advertisment

இதற்கிடையே, இப்படத்தில் சிம்புவிற்கு தாயாக நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் மும்பையில் தொடங்கவுள்ளதாக சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாம்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இப்படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் சிம்பு மும்பை செல்லும் விமானத்தில் பயணிக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.

Advertisment

actor simbu Vendhu Thanindhathu Kaadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe