இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு கெளதம்மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, என்.கிருஷ்ணாஇயக்கத்தில்'பத்து தல' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது 39வது பிறந்தநாளை நேற்று (4.2.2022) கொண்டாடிய நடிகர் சிம்பு,தன்னுடையட்ரான்ஸ்பர்மேஷன்வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் சிம்பு 'செக்கச்சிவந்த வானம்', 'வந்தா ராஜாவாதான் வருவேன்' போன்ற படங்களில் இருந்தது போலவே அதிக பருமனுடன்தோன்றியிருப்பார். அந்த காலகட்டத்தில் சிம்புவால் ஓட கூட முடியாதநிலை ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து தனது ரசிகர்களுக்காகவும், தனக்காகவும் உடல் எடையைகுறைக்க முடிவெடுத்த சிம்பு தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார். இதனால்பெரும் கஷ்டத்தையும், வலிகளையும் அனுபவித்த அவர் வீடியோவின்இடையில் "வாழ்க்கையில வெயிட் மட்டும் போட்றாதீங்க.. அப்படிபோட்டீங்கன்னா குறைக்கனுன்னு நினைக்காதீங்க அதோடு சந்தோஷமாவாழ பழகிக்கோங்க" எனக் கூறியிருப்பார். இருப்பினும் நடிகர் சிம்பு தனது விடா முயற்சியால் தனது உடல் எடையை 105கிலோவில் இருந்து 72 கிலோவாக குறைத்து காட்டியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ யூடியூப் தளத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'ஈஸ்வரன்' படத்தில் சிலிம்மாகபழைய சிம்புவாக தோன்றியிருப்பார். 'செக்க சிவந்த வானம்' படத்திற்கும் 'ஈஸ்வரன்' படத்திற்கும் சிம்புவிடம் எவ்வளவு மாற்றங்கள் என நினைத்து பலரும் ஆச்சரியப்பட்டனர். இந்த ஆச்சரியத்துக்கு விடையாகசிம்புவின் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதங்களில் கருத்து தெரிவித்தும்பகிர்ந்தும் வருகின்றனர்.