/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/243_8.jpg)
கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தின் டீசர், ட்ரைலர், இசை என அனைத்தும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் நாளை (30.03.2023) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் காட்சி காலை 8 மணி முதல் தொடங்குகிறது. சிறப்பு காட்சிகள் எதுவும் திரையிடப்படவில்லை. படத்திற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில், "பத்து தல படத்துக்கு நல்ல ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. பெரிய ஓப்பனிங் இருக்கு என்று சொல்றாங்க. இதற்கெல்லாம் காரணம் நான் கிடையாது. மேலும் என்னுடைய முந்தைய படம் ஹிட்டானதுகாரணம் கிடையாது. நீங்க கொடுத்த ஆதரவு தான் முழு காரணம். அதை என்றும் நான் மறக்கமாட்டேன். அதற்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும் பத்தாது. எனக்கு நன்றி சொல்ல தெரியவில்லை. படத்துக்கு உங்க ஆதரவு கண்டிப்பா தேவை. நீங்க இல்லாமல் நான் இல்லை" எனப் பேசியுள்ளார். மேலும் அவருக்கே உரித்தான ஸ்டைலில் விரல்களை ஆட்டி முத்தம் கொடுத்தார்.
ஆரம்ப காலகட்டத்தில் 'சொன்னால்தான் காதலா', 'குத்து' எனத்தொடங்கி 'வல்லவன்' வரை பல படங்களின் ஓப்பனிங் சாங்கில் விரல்களை ஸ்டைலாக ஆட்டி வித்தை காட்டுவார். பின்பு அந்த ஸ்டைல் பெரிதளவு அவர் படங்களில் இடம்பெறவில்லை. சிம்புவின் சமீபத்திய ஹிட் படங்களான மாநாடு, மற்றும் வெந்து தணிந்தது காடுபடங்களிலும் அது மிஸ்ஸாகிஇருந்தது. இந்த நிலையில் மீண்டும் அந்த ஸ்டைலில் தற்போது சிம்பு பேசியிருக்கும் நிலையில் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)