Advertisment

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்த சிம்பு!

bfxnxfnx

இயக்குனர் ஜனநாதனின் உதவியாளரும், அறிமுக இயக்குநருமான வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, வில்லனாக மகிழ் திருமேனி நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். விவேக், மோகன் ராஜா, ரித்விகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Advertisment

இந்த நிலையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி, 'முருகா' எனப் பெயரிடப்பட்டுள்ள பாடல், மார்ச் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் பாடலை பாடியது யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக விஜய் சேதுபதி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

Vijay Sethupathi vijaysethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe