Advertisment

சிம்புவுக்கும் யுவனுக்கும் ஒரு ராசியிருக்கு! 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'மாநாடு' படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். முதலில் உற்சாகமாக அறிவிக்கப்பட்ட 'மாநாடு', பிறகு தடைபட்டு சமாதான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. நேற்று வெளிவந்த அப்டேட்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துள்ளன. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்தும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் அப்டேட்களை வெளியிட்டார். அதில் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா என்ற செய்தியையும் வெளியிட்டிருந்தார்.

Advertisment

str with yuvan

'மாநாடு' படத்திற்கு யுவன் இசை என்பது சிம்பு ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் திரையிசை ரசிகர்களையே மகிழ்விக்கும் ஒரு செய்தியாகும். சிம்பு - யுவன் காம்போவின் ட்ராக் ரெக்கார்ட் அப்படி. 'காதல் அழிவதில்லை' படத்தில் அறிமுகமான சிம்புவுக்கு அதன் பிறகு வெளிவந்த 'தம்', 'கோவில்' போன்ற படங்கள் ஓரளவு வெற்றியாக அமைந்தாலும் பெரிய வெற்றியாக அமைந்தது 'மன்மதன்' திரைப்படமே. அந்தப் படத்திற்கு இசையமைத்தது யுவன் சங்கர் ராஜா. 'காதல் வளர்த்தேன்', 'தத்தை தத்தை', 'வானமுன்னா'என அந்தப் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகின. அந்தப் படத்தின் தீம் ம்யூசிக் படத்திற்கு பெரிய பலமாக இருந்தது. அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இருந்தது 'மன்மதன்'. அந்த வெற்றி தந்த உற்சாகத்தில் 'வல்லவன்' படத்தை தானே இயக்கினார் சிம்பு. யுவன் இசையமைத்த அந்தப் படத்தின் பாடல்கள் இன்னும் பெரிய வெற்றியை பெற்றன. 'லூசுப்பெண்ணே' பாடல் இளைஞர்களின் மத்தியில் மிகப்பிரபலமான ரிங் டோனானது. 'மன்மதன்' அளவுக்கு 'வல்லவன்' வெற்றி பெறாத போதும் சிம்பு - யுவன் காம்போ ஒரு வெற்றிக் கூட்டணியானது.

manmadhan

Advertisment

பிறகு வெளிவந்த 'சிலம்பாட்டம்' படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். படமும் வணிக ரீதியாக வெற்றிப் படமே. 'வானம்' படத்தின் 'எவன்டீ' பாடலும் வைரல் ஹிட்டானது. படமும் ஓரளவு வெற்றி பெற்றது. இப்படி சிம்பு - யுவன் இணைந்த படங்கள் எதுவும் தோற்றதில்லை என்ற ரெகார்ட் அவர்கள் இருவரும் இணைந்தால் ராசி என்று சினிமாவுலகின் நம்பிக்கைப்படி பேசப்பட்டது. இந்த எல்லா நம்பிக்கையையும் உடைத்தது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம். படுதோல்வியடைந்த அந்தப் படத்தின் பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை. 'ரத்தம் ரத்தம்' பாடல் மட்டும் சிம்பு ரசிகர்களை கவர்ந்தது. என்றாலும் இந்தக் கூட்டணியில் வெற்றிதான் அதிகம். அதற்குக் காரணம் இருவரது இசை ரசனை மற்றும் நட்பு. இந்த நண்பர்கள் 'மாநாடு' படத்தில் மீண்டும் இணைகின்றனர். வெங்கட் பிரபு - யுவன் காம்போவும் வெற்றி பெற்ற கூட்டணிதான். இப்போது சிம்பு - வெங்கட் பிரபு - யுவன் இணைந்திருக்கும் 'மாநாடு' படத்தின் பாடல்களை பெரிதும் எதிர்பார்த்திருக்கின்றனர் ரசிகர்கள்.

yuvanshankarraja Simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe