simbu starring pathu thala movie update

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில்சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படம் குறித்த தகவல் நாளை (3.2.2022) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தற்போது 'பத்து தல' படத்தை தயாரிக்கும் ஸ்டூடியோ ஸ்கீரின் நிறுவனம்புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இன்று இரவு 12 மணிக்கு சரியாக சிம்பு பிறந்தநாள் தொடங்கும் நேரத்தில் 'பத்து தல' மற்றும் சிம்புவின் புதிய படம் குறித்த இரண்டு அப்டேட்டுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையறிந்த ரசிகர்கள் தற்போதிலிருந்தே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment