அல்லு அர்ஜுன் - த்ரிவிக்ரம் கூட்டணியில் பொங்கல் அன்று வெளியான 'அலா வைகுந்தபுரம்லோ' படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

Advertisment

vfsdf

பூஜா ஹெக்டே மற்றும் நிவேதா பெத்துராஜ் நாயகிகளாக நடித்த இப்படத்தை 'வாலு', 'ஸ்கெட்ச்' பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் ரீமேக் ஆக்கவுள்ளதாகவும், அதில் நாயகனாகசிம்பு நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் ரீமேக் உரிமையைப் படக்குழுவினர் இன்னும் யாருக்கும் விற்கவில்லை என்றும், படத்தின் ரீமேக் உரிமைக்குப் படக்குழு பெரும் விலை கேட்பதால் அனைவரும் தயக்கம் காட்டிவருகிறார்கள். இதனால் இந்தச் செய்திகள் அனைத்தும் வதந்தியே எனப் புதிய தகவல் வெளியாகவுள்ளது.