Advertisment

பாம்பு பிடிக்கும் சிம்பு! 

simbu yuvan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் 'மாநாடு' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பல தடைகளுக்குப் பின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தலால் மீண்டும் ஷூட்டிங் தடைப்பட்டது.

Advertisment

தற்போது தமிழக அரசு சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கியதை அடுத்து நவம்பர் மாதத் தொடக்கத்தில், 'மாநாடு' படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் அறிவித்தார்.

Advertisment

இதனிடையே இருக்கும் ஒரு மாத இடைவேளையில் சூசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க திட்டமிட்டு, திண்டுக்கல்லில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'ஈஸ்வரன்' என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மதியம் வெளியாகி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் சிம்பு. கடந்த சில வருடங்களாக மிகவும் பருமனாக காணப்பட்ட சிம்பு, செம ஃபிட்டாக உடம்பைக் குறைத்து இருக்கிறார்.

சிம்பு தனது உடல் மாறுதலை சர்ப்ரைஸாக ரசிகர்களுக்குக் காட்ட வேண்டும் என்று உறுதியாக இருந்து, தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவின் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் லீக்காகி வருகின்றன.

இந்நிலையில், சிம்பு தனது மாற்றத்தை அனைவருக்கும் காட்டும்படி, மிகவும் ஒல்லியான தோற்றத்துடன் ஃபிட்டான டி -ஷர்ட் அணிந்துகொண்டு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டது செம வைரலானது. அடுத்தடுத்து சிம்பு உடல் எடை குறைத்தது எப்படி என்ற சுவராஸ்யமான பல தகவல்கள் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், தினசரி சிம்பு தரப்பிலோ, அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து லீக்காகியோ புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியாகிக்கொண்டே வருகிறது. நேற்று தன்னுடன் நடிக்கும் பாலாசரவணனின் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது படத்தின் காட்சி ஒன்றில் பாம்பு பிடிப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி எடுக்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

Simbu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe