style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
செக்கச் சிவந்த வானம் படத்தைதொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற 'அத்தாரின்டிகி தாரேதி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் இன்று துவங்கியது. அதோடு படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்புவின் புதிய தோற்றமும் தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். மேலும் படக்குழு இப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.