Advertisment

சிம்பு வெளியிட்ட 'ராக்கெட் டிரைவர்' பட டிரைலர்

simbu released the Rocket Driver trailer

ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்கத்தில் விஸ்வத், சுனைனா, நாக விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராக்கெட் டிரைவர்'. ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் இப்படத்திற்கு கௌசிக் கிரிஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

Advertisment

இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இதனை சிம்பு வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் டிரெயிலரை வெளியிட்ட நடிகர் சிலம்பரசனுக்கு ஒட்டுமொத்த படக்குழுவினரும் நன்றி தெரிவித்தனர். இப்படம் சாதாரண ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய கதை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாமை தனது ரோல் மாடலாக கொண்டிருக்கும் ஆட்டு ஓட்டுநர், தன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கிறார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களை அடிப்படையாக கொண்டு உப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisment

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe