கடந்த இரண்டு வருடகளாக இப்போதா அப்போதா மாநாடு பட ஷூட்டிங் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருந்த நிலையில் கடந்த பொங்கல் பண்டிகை அன்று ஒரே அடியாக தொழில்நுட்ப கலைஞர்கள், யார் படத்தில் நடிக்கின்றனர் என்று முழு அறிவிப்பையும் வெளியிட்டது படக்குழு.

simbu

Advertisment

Advertisment

மேலும் இந்த படத்தில் சிம்புவுடன் முதன்முறையாக இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சி நடிக்கின்றனர். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் ஃபிப்ரவரி மாதத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஹன்சிகாவின் ஐம்பதாவது படமான மஹாவில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். ஜமீலா என்பவர் இயக்கும் இந்த படத்தில் சிம்பு பைலட்டாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சிம்பு குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், “மஹா படத்தின் இரண்டாம் பாதியின் ஷூட்டிங் ஜனவரி இறுதியில் தொடங்க இருக்கிறது. உங்களுக்கு என்னுடைய அன்பு எப்போதும் உண்டு. நீங்கள் ஒரு ரத்தினம். உங்களுடைய படத்தை தயாரிப்பதற்கு மிக்க மகிழ்ச்சியும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.