சிம்பு கொடுத்த கிஃப்ட்... ஆட்டோகிராஃப் வாங்கிய நடிகர்... (வீடியோ)

நடிகர் சிம்பு வந்தாராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு மஃப்டி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வந்தாராஜாவாதான் வருவேன் படத்திற்கு முன்பே மாநாடு என்றொரு படத்தில் ஒப்பந்தமும் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போதுவரை படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. படக்குழு இந்த மாத இறுதிக்குள் பட ஷூட்டிங்கை தொடங்கிவிடுவோம் என்று அறிவித்தது. தற்போது ஜூலை 23ஆம் தேதி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

வந்தா ராஜாவாதன் படத்தை முடித்துவிட்டு சிம்பு உடல் எடையை குறைக்க இரண்டு மாதம் லண்டன் சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பிய சிம்புவோ திடீரென ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு கௌரவ தோற்றத்தில் நடித்துகொடுத்தார். தற்போது மஃப்டி படக்குழுவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு வில்லனாக நடிக்கும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கௌதம் கார்த்திக்கு நடிகர் சிம்பு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஒரு அழகான கூலிங் கிளாசை கௌதம் கார்த்திக்கு சிம்பு கொடுத்திருக்கிறார். பின்னர், கௌதம் கார்த்திக் சிம்புவிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கன்னடத்தில் உருவான 'மப்டி' படத்தின் இயக்குனர் நர்த்தன் என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கிறது.

Simbu
இதையும் படியுங்கள்
Subscribe