கடந்த ஃபிப்ரவரி 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அவ்வளவாக எதிர்பார்ப்புகள் இன்றி வெளியான இப்படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது.

Advertisment

str

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், ஷாரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கியுள்ளார். கௌதம் மேனன் இப்படத்தில் கேமியோ ரோல் செய்திருக்கிறார். விஜய் சேதுபதி ஒரு நீண்ட கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார்.

Advertisment

இந்த படத்தினை பலரும் பாராட்டி வரும் நிலையில் சிம்புவும் படத்தை பார்த்துவிட்டு இயக்குனருக்கு ஃபோன் செய்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து அஸ்வந்த் ட்விட்டரில், “எஸ்.டி.ஆர் என்னை தொடர்புக்கொண்டார். படம் குறித்து ஒரு மணி நேரம் பேசினார். மனமார வாழ்த்தினார். நான் எழுதும்போது யோசித்து வைத்த சின்ன சின்ன நுணுக்கங்களையும் சிம்பு நோட் செய்து அப்படியே விரிவாக சொன்னார். மிகவும் பணிவான மனிதர். சிறந்த உரையாடல்” என்று பதிவிட்டுள்ளார்.