சித்தார்த் நடிப்பில்  '8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ இயக்கத்தில் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘3 பிஹெச்கே’(3 BHK). இப்படத்தில் சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். 

Advertisment

இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர் ராம், ரவி மோகன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டினர். இதனால் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. 

Advertisment

15

இந்த நிலையில் சிம்பு தற்போது இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இப்போதுதான் 3 பிஹெச்கே படம் பார்த்தான். ஒரு உணர்ச்சிப்பூர்வமான பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் ஒரு இதயப்பூர்வமான அழகான படம். சித்தார்த் மற்றும் சரத்குமார் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். இயக்குநர் ஸ்ரீ கணேஷ், மற்றும் தயாரிப்பு நிறுவனம் சாந்தி டாக்கீஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவிற்கு வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.