style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
தன் குண்டு உடலை மெலிய வைப்பதற்காக லண்டனில் உடற்பயிற்சி செய்துவரும் சிம்பு அடுத்ததாக 'மாநாடு’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தொடர்ந்து அவர் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற ‘மப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க சிம்பு வில்லனாக நடிக்கவுள்ளார் எனவும் புதிய தகவல் வெளியாகவுள்ளது. மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முன்னணி வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சிம்பு ஹன்சிகாவின் 'மஹா' படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.