வந்தா ராஜாவாகதான் வருவேன் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. மேலும் வந்தா ராஜாவாகதான் வருவேன் பட சமயத்திலேயே சிம்புவின் பெருத்த உடல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைக்க லண்டனில் உள்ள ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் அங்கு எடுக்கப்பட்ட சிம்புவின் செல்பி புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.