Advertisment

"எதிரிகளை மிதிச்சு ஏறி மேல வந்தவன்" - ராவணனாக மிரட்டும் சிம்பு

simbu Pathu Thala teaser released

Advertisment

கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாட்டு 'நம்ம சத்தம்' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை பார்க்கையில் சிம்புவின் குரலில் தொடங்கிய டீசர் அவரது கதாபாத்திரம் பற்றியும் படத்தின் கதையை பற்றியும் விவரிக்கிறார். மேலும் வில்லன்களுக்கும் இவருக்கும் நடக்கும் நிகழ்வுகளை ஆக்‌ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது. மேலும் ஏ.ஜி. ராவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்பு, "நான் படி ஏறி மேல வந்தவன் இல்லை... எதிரிகளை மிதிச்சு ஏறி மேல வந்தவன்" என்று பேசும் வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த டீசர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

actor simbu gautham karthick pathu thala
இதையும் படியுங்கள்
Subscribe