Advertisment

'பத்து தல' - சிம்பு வெளியிட்ட அப்டேட்

simbu pathu thala shoot wrap

'வெந்து தணிந்தது காடு' படத்தைத்தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'பத்து தல'. கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'ஸ்டூடியோ க்ரீன்' ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

Advertisment

இந்நிலையில் 'பத்து தல' படத்தின் புதியஅப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது நிறைவடைந்துள்ளதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த சிம்பு படக்குழுவினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Advertisment

actor simbu pathu thala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe