Advertisment

சிம்புவின் 'பத்து தல' - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

simbu pathu thala ott release date update

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் 'பத்து தல'. இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

Advertisment

முதல் நாளில் ரூ.12.3 கோடி வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்திருந்தது. பின்பு இம்மாதம்1 ஆம் தேதி இப்படத்தின் விநியோகஸ்தர் சக்திவேலன், சிம்பு மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினரை சந்தித்து படத்தின் வெற்றியைக் கொண்டாடினர். கடந்த 7ஆம் தேதி "பத்து தல திரைப்படம் சிலம்பரசனின் கரியரில் அதிக வருவாயை ஈட்டிய ஒரு படமாக மட்டுமல்லாமல், எங்களின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் லாபம் தந்திருக்கக்கூடிய படமாகவும் அமைந்துள்ளது" என அனைவருக்கும் நன்றி தெரிவித்து தயாரிப்புநிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 27 ஆம் தேதி (27.04.2023) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன்ஸ் நிறுவனம் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து அதற்கான போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்கள்.

amazon prime pathu thala actor simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe