/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/48_38.jpg)
நடிகர் சிம்பு,கிருஷ்ணா இயக்கும் 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'ஸ்டூடியோ க்ரீன்' ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது போஸ்ட்புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் படக்குழு படத்தின் டப்பிங் பணிகளை ஆரம்பித்து நடத்தி வருகிறது. இந்த நிலையில், 'பத்து தல' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற மார்ச் மாதம் 30 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது.
மேலும், ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரைவெளியிட்டு2023 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடத்தை'பத்து தல' பட அப்டேட் மூலம் ஆரம்பியுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக இப்படம் இம்மாதம் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், சில காரணங்களால் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)