Advertisment

போஸ்டர் ஒட்டிய சிம்பு... நெகிழ்ந்த பிரபலம் 

irumbu thirai.jpeg

சர்ச்சைகளுக்கு பேர் போனவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் கூட காவேரி விவகாரத்தில் இவர் செய்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. ஆனால் அதையெல்லாம் எப்போதும் கொஞ்சம் கூட பொருட்படுத்தாதவர் நடிகர் சிம்பு. இப்படி அவர் மேல் பல குற்றச்சாட்டுகள், புகார்கள் பலர் கூறினாலும் சிம்பு எப்போதும் தன் ரசிகர்களை கைவிட்டது இல்லை. அவர்கள் மேல் எப்பவும் அன்போடும், பரிவோடும் இருப்பார். இந்நிலையில் சிம்பு தன் ரசிகரின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. திரையுலகினர் மத்தியிலும் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்துள்ளது. மேலும் இதனை பார்த்த நடிகர் விவேக் தன் ட்விட்டரில் சிம்புவை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில்...."தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார். அவர் இடம் அப்படியே இருக்கிறது" என்று நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

Advertisment
Simbu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe