style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
ஹன்சிகா தன் 50வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா புகை பிடிக்கும் படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது சிம்புவும் 'மஹா' படத்தில் நடிக்கவுள்ளார். சிம்புவும், ஹன்சிகாவும் சில வருடங்களுக்கு முன் காதலித்து பிரிந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மஹா' படத்தில் இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு துருக்கியின் இஸ்தான்புல் பகுதியில் நடக்கவுள்ளது. இதற்காக தன் உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வரும் சிம்பு 10 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். மேலும் சிம்பு லண்டனில் இருந்து புறப்பட்டு இஸ்தான்புல் சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அங்கே சிம்பு, ஹன்சிகா சேர்ந்து நடிக்கும் காட்சிகளைப் படம் பிடிக்கின்றனர். நயன்தாராவுடன் காதலித்து பிரிந்த பின்பு சிம்பு, நயன்தாரா மீண்டும் இணைந்து 'இது நம்ம ஆளு' படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.