Skip to main content

‘சிம்பு நடிகர் இல்லை, எனக்கு கடவுள்’- பிரபல நடிகை நெகிழ்ச்சி பதிவு

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

சுந்தர்.சி இயக்கத்தில்  ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் சிம்பு நடித்து வெளியான பின் உடல் எடையை குறைப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு மேல் லண்டனில் தங்கினார் சிம்பு. இப்படத்திற்கு முன்பே சிம்பு நடிப்பதாக ஒப்புக்கொண்ட படம் மாநாடு. அவர் லண்டனில் இருந்து திரும்பியவுடன் அந்த படத்திற்குதான் கால்ஷீட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் கவுதாம் கார்த்திக்குடன் இணைந்து கன்னட படமான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார்.
 

simbu

 

 

தற்போது இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நடைபெற்று முடிந்துவிட்டது. கவுதம் கார்த்திக்கும் சிம்புவை பற்றி புகழ்ந்து தள்ளி பல பதிவுகள் டிவிட்டரில் பதிவிட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் இந்த மாத இறுதியில் மாநாடு ஷூட்டிங்கில் சிம்பு கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சிம்புவுடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுட்டுள்ளார். அதில், “சிம்பு நடிகர் இல்லை, எனக்கு கடவுள். நானும் லிரிக்ஸ் எழுதுவேன். என்னுடைய பிரெண்ட்ஸ் படித்துவிட்டு நீ ஒரு பெண் வெர்ஸன் சிம்பு என கூறுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரொம்ப அப்டேட் கேட்காதீங்க... தவறான டிசிஷன் எடுக்க வாய்ப்பிருக்கு” - சிம்பு பேச்சு

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

 "Don't ask for too many updates...there is a chance of taking a wrong decision" - Simbu speech

 

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடைபெற்றது.

 

இதில் பேசிய நடிகர் சிம்பு, ''ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். படம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது அப்டேட் கேக்குறீங்க. நிறைய அப்டேட்ஸ் வேணும்... அப்டேட்ஸ் வேணும்னு கேட்குறீங்க. உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால், ஒரு விஷயத்தை இங்கே ஷேர் பண்ணிக்க விரும்புகிறேன். டைரக்டராக இருக்கட்டும், ஹீரோவாக இருக்கட்டும் அந்த படத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு ரொம்ப மெனக்கெட்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் தினமும் ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்க என்று சொல்லும் போது ஒரு தவறான டிசிஷன் எடுக்கக் கூடிய வாய்ப்பு நிறைய இருக்கிறது. அதனால் என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய ரிக்வெஸ்ட் என்னவென்றால் உங்களை சந்தோசப்படுத்துவது தான் எங்களுடைய முதல் வேலையே.

 

எனவே, எங்களுக்கு அதற்கான களத்தை கொடுத்தீர்கள் என்றால்தான் நல்ல படங்கள் வரும். அதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா ரசிகர்களும் ஒரு ஹீரோவை தூக்கி மேல வைப்பாங்க. ஆனால், நான் என்னுடைய ரசிகர்களை தூக்கி மேல வைக்கணும்னு நினைக்கிறேன். என் படத்துக்கு மட்டும் இல்ல. எல்லா படத்துக்கும் ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க. உங்களுக்கு நல்ல படம் கொடுப்பதற்கு நாங்கள் எல்லோரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது எங்க பத்து தல டைரக்டர் சொல்ல சொன்னாரு. அதனால தான் சொன்னேன்.'' என்றார். 

 

 

Next Story

''முகத்துல தான் வைத்திருப்பேன் தாடி... எதையுமே மறைக்க மாட்டேன் மூடி''-டி.ஆர் பேட்டி

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

TR

 

உடல்நலக்குறைவு காரணமாக உயர் சிகிச்சை பெறுவதற்காக திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று அமெரிக்கா சென்றார். இதற்கு முன்பே சென்னை உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரை தமிழக முதல்வர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

 

இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த டி.ஆர்.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''நான் உயர் சிகிச்சைக்காக இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன். நான் வாழ்க்கையில எதையுமே மறைச்சதில்லை. நான் முகத்துலதான் வைத்திருப்பேன் தாடி, நான் எதையுமே மறைச்சு வைக்கமாட்டேன் மூடி. இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன் ஆனால் அதற்குள்ளேயே நான் அமெரிக்கா போயிட்டேன் அங்கே போயிட்டேன் இங்கே போயிட்டேன்னு தப்பும் தவறுமா செய்திகள் வெளியாகிறது. நானே சினிமா கதையாசிரியர். வித விதமா கதை எழுதி வசனம் எழுதி, திரைக்கதை எழுதி யார் யாரோ என்ன என்னவோ பண்ணாங்க... ஆனால் இறைவனைமீறி, விதியை மீறி, கர்மாவை மீறி எதுவும் நடக்காது. நான் ஒரு சின்ன நடிகன், சாதாரண சின்ன கலைஞன், லட்சிய திமுக எனும் சின்ன கட்சியை நடத்துபவன். ஆனா என் மேல பாசம் வைத்து, பரிவு வைத்து பல பேர் செய்த பிரார்த்தனை, ஆராதனை காரணமாகத்தான் இன்று நான் இங்கு நின்னுகிட்டு இருக்கேன். எனது ரசிகர்களுக்கும், எனது மகன் சிம்பு ரசிகர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும், கட்சியை தாண்டி  எனக்காக பிரார்த்தித்த அனைவரும் எனது நன்றி'' என்றார்.