நீளும் சிம்பு பட லிஸ்ட்; திடீர் என்ட்ரி கொடுத்த ஹிட் பட இயக்குநர்

simbu next with Desingh Periyasamy

கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன்ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாட்டு 'நம்ம சத்தம்' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தின் டீசர் நாளை மாலை 5.31 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சிம்பு நடிக்கும் புது படம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த தேசிங் பெரியசாமி சிம்புவின் புதிய படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிங் பெரியசாமி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்படம் முடித்தவுடன் ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. அதன்பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த சூழலில் சிம்புவுடன் கைகோர்க்கவுள்ளதாகச் சொல்லப்படும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும்,பத்து தலபடம் முடிந்தவுடன்ஏ.ஆர். முருகதாஸ், மிஷ்கின் உள்ளிட்ட இயக்குநர்களின் பெயர் சிம்புவின் அடுத்த பட லிஸ்டில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் திடீர் என்ட்ரியாக தேசிங் பெரியசாமி பெயர் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

actor simbu desing periyasamy
இதையும் படியுங்கள்
Subscribe