simbu new project announcement

Advertisment

வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து பத்து தல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே கமல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் இப்படம் சில காரனங்களால் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். அஷ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே மூலம் கவனம் ஈர்த்த நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ட்ராகன் என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இந்தப் படத்தையும் ஏ.ஜி.எஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்த சூழலில் மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்கவுள்ளார்.

படத்தின் அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த போஸ்டரில் சிம்பு ஆரம்ப காலகட்டங்களில் தான் நடித்து வந்த பழைய கெட்டப்பில் இருக்கிறார். இந்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட சிம்பு, ‘கட்டம் கட்டி கலக்குறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பழைய சிம்புவை பார்க்கலாம் என்றும் ஹேஷ் டேக் மூலம் கூறியுள்ளார்.

Advertisment