Advertisment

கமல் - சிம்பு கூட்டணி பட இயக்குநர் பரபரப்பு புகார்

simbu movie director desingh periyasamy complaint

Advertisment

துல்கர் சல்மான் நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்பெரியசாமி. இப்படத்தை அடுத்து தற்போது சிம்புவின் 48ஆவது படத்தை இயக்கவுள்ளார். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் இவர், தன்னுடைய உதவி இயக்குநர் ரூ.3 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகார் கொடுத்துள்ளார்.அண்ணா நகர் காவல் நிலையத்தில் தேசிங்பெரியசாமி கொடுத்த புகார் மனுவில், “என்னிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முகமது இக்பால் என்பவர் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். பணியில் சேர்ந்த நாள் முதல் என் வீட்டு வரவு செலவு கணக்குகளை அவர் தான் கவனித்து வந்தார்.இந்த சூழலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 150 கிராம் தங்க நகைகளை முகமது இக்பாலிடம் கொடுத்து தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்று வருமாறுகூறியிருந்தேன். ஆனால் அவர் அடகு வைத்துக் கிடைத்த 3 லட்ச ரூபாயை திருடி விட்டார். பணம் குறித்துக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்” எனக் குறிப்பிட்டு முகமது இக்பால் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், முகமது இக்பால் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமைறைவாக இருக்கும் அவரைத்தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேசிங் பெரியசாமி குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

desing periyasamy actor simbu ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe