simbu

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

'செக்க சிவந்த வானம்' படத்தையடுத்து நடிகர் சிம்பு அடுத்ததாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படம், சிம்பு இயக்கும் படம் மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 என அடுத்தடுத்து சிம்பு பிசியாக இருப்பதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்ற நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவை சிம்பு சந்தித்து பேசியதால் இவருடன் இணைந்து 'பில்லா 3' படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் சிம்பு சமீபத்தில் 'துருவங்கள் பதினாறு' பட இயக்குநர் கார்த்திக் நரேனையும் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பில் கார்த்திக் நரேன், சிம்புவிடம் த்ரில்லர் கதை ஒன்றை கூறியிருப்பதாகவும், அதற்கு சிம்பு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் அடுத்த கட்ட பணிகள் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிம்புவின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">