மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு சிம்பு உதவிக்கரம்

304

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கெத்து தினேஷ், ஆர்யா நடிப்பில் ‘வேட்டுவம்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி, வேளாங்கண்ணி, வேதாரண்யம் மற்றும் விழுந்தமாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. அந்த வகையில் விழுந்தம்பாடி கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி நடந்த படப்பிடிப்பில் கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது காரை இயக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் எஸ். மோகன்ராஜ், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.  

இந்த உயிரிழப்பு சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்போரை பதைபதைக்க வைத்தது. இந்த விபத்து தொடர்பாக பா.ரஞ்சித் உட்பட நான்கு பேர் மீது அலட்சியமாக செயல்பட்டது உட்பட 3 பிரிவுகளின் கீழ் நாகை மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஸ்டன்ட் மாஸ்டர் எஸ்.மோகன்ராஜின் உடலுக்கு ஆர்யா, பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர். பின்பு பா.ரஞ்சித்தின் தரப்பில் சம்பவம் குறித்து விள்ளக்கமளிக்கப்பட்டது. அதில் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் மோகன்ராஜ் உயிர் பிரிந்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

303

இந்த நிலையில் மோகன்ராஜ் குடும்பத்தினருக்குச் சிம்பு உதவி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரூ.1 லட்சத்திற்கான காசோலையைச் சிம்பு சார்பில் மோகன்ராஜ் குடும்பத்தினருக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

actor simbu pa.ranjith
இதையும் படியுங்கள்
Subscribe