Simbu, Hansika movie release date announcement

Advertisment

தனுஷின் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வந்தார். கடைசியாக தமிழில் அதர்வாவின் '100' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு ஜமீல் இயக்கத்தில் ‘மஹா’ படத்தில் நடித்துள்ளார். சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ஹன்சிகாவிற்கு 50-வது படம் ஆகும். 'எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட்' சார்பில் மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடலை படக்குழு வெளியிட்டது. கடந்த வருடம் ஜூலை மாதம் தணிக்கை செய்யப்பட்ட இப்படம் சில காரணங்களால் வெளிவரவில்லை.

இந்நிலையில் ‘மஹா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதோடு புதிய போஸ்டர் ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. அதன் படி 'ஸ்டுடியோ 9 ப்ரொடக்ஷ்ன்' சார்பாக ஆர்.கே சுரேஷ் ஜூன் 10-ஆம் தேதி ‘மஹா’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறார்.