/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/356_6.jpg)
தனுஷின் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஹன்சிகா கடைசியாக தமிழில் அதர்வாவின் '100' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு ஜமீல் இயக்கத்தில் ‘மஹா’ படத்தில் நடித்துள்ளார். சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ஹன்சிகாவிற்கு 50-வது படம் ஆகும். 'எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடலை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் ‘மஹா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஜூலை மாதம் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டரை படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இப்படம் ஜூன் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி பின்பு சில காரணங்களால் வெளியாகாமல் போனது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)