ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘மஹா’. ஜமீல் இயக்கியுள்ள இப்படத்தை 'எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியானது.
இந்நிலையில் 'மஹா' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் உள்ளது. மேலும் ட்ரைலர், குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் ஹன்சிகா குழந்தையும் மாட்டிக்கொள்கிறது. அந்த சைக்கோவிடம் இருந்து குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை த்ரில்லிங்காக சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரில் வரும் வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.