/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/426_2.jpg)
இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா 'மகா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்க, ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இது நடிகை ஹன்சிகாவின் 50வது படமாகும்.எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.கடந்த ஆண்டே இப்படத்தின் அனைத்துபணிகளும் முடிந்த நிலையில் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக 'மகா' படத்தின் வெளியீடு தடைப்பட்டுப் போனது.
இந்நிலையில்இப்படத்தின் ரிலீஸ் குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, அதன்படி, 'மகா' திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகபடக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படமும்அதே ஏப்ரல் 28 ஆம் தேதிதிரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)