simbu

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை தொடர்ந்து சிம்பு, மாநாடு, மஃப்தி கன்னட ரீமேக் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.மஃப்தி ரீமேக்கின் முதலாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று முடிந்தது. ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிம்பு, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். திடீரென இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு சிம்பு செல்லவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்சனை எனசெய்திகள் வெளியாகின. இதன்பின் 'மாநாடு' மற்றும் 'மஹா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சிம்பு. இப்போது கரோனா ஊரடங்கினால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. தற்போது 'முஃப்தி' ரீமேக்கை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

Advertisment

இதில் சிம்பு - ஞானவேல்ராஜா இருவருக்கும் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும், கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் வெளியாகவுள்ளது. இதன்மூலம் மஹா, மாநாடு, மஃப்தி உள்ளிட்ட மூன்று படங்களிலும் கவனம் செலுத்த சிம்பு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.