
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தில் சிம்பு நடித்து வருகிறார். கரோனாவால் படத்தின் ஷூட்டிங் முடங்கியது. இந்தப் படத்திற்கு அதிக ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பதால் கரோனா அச்சுறுத்தல் முழுவதும் முடிந்த பிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
'மாநாடு' படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இதனிடையே 'மாநாடு' ஷூட்டிங் தொடங்குவதற்குள் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், சிம்பு நடிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்தான அறிவிப்புகள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கவுள்ளது. 35 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வழங்க, சுசீந்திரன் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் சிம்புவுடன் நடிக்க உள்ளவர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சுசீந்திரன் படத்தை முடித்துவிட்டு, நவம்பரில் 'மாநாடு' படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.