simbu

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய், ஆகியோரின் வரிசையில் இன்னொரு இரு துருவங்களாக இருப்பது தனுஷ் - சிம்பு ஜோடி. தொழிலில் எலியும் பூனையுமாக உள்ள இவர்கள் நிஜத்தில் நண்பர்களாகவே பழகி வருகின்றனர். அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள 'வடசென்னை' படம் உலகமெங்கும் இன்று வெளியாகியுள்ள நிலையில் இப்படம் வெற்றி பெற தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில்..."அருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவுக்கு எனது சார்பாகவும், எனது ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. ஒரு நல்ல தரமான படத்தை என்றுமே ஆதரிக்க வேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டு தனுஷிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.