Published on 22/11/2018 | Edited on 22/11/2018

கஜா புயல் தாக்கி தமிழக டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் நிதி உதவி செய்து வருகின்றனர். மேலும் அரசு சார்பில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சிம்பு வீடியோ மூலம் டெல்டா மக்களுக்கு உதவ மொபைல் நெட்வொர்க் மூலமாக அனைவரும் உதவ புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். மேலும் அதில்... "ஒருவர் சாதாரணமாக ஒரு பத்து ரூபாயோ அல்லது நூறு ரூபாயோ உதவியாக கொடுக்க நினைத்தாலும் அதற்கான வழிமுறை பலருக்கும் தெரியவில்லை. அதனால் மொபைல் நிறுவனங்கள் மூலம் நிதியை நிவாரணத்திற்கு அனுப்பும் ஒரு முயற்சியினை மேற்கொள்ளை வேண்டும்" என்று யோசனை தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.